டோனிக்கு கடைசி கட்டத்தில் ஓவர் போடுரவங்க கதி அதோ கதி தான்! சென்னை பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை அணியில் விளையாடும் டோனியின் நம்பிக்கை எங்களுக்கு நல்லது அதே சமயம் கடைசி கட்ட பந்து வீச்சாளர்களுக்கு அது அபாயம் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

சென்னை அணியின் தலைவரான டோனி, இந்த ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார். போட்டியை முடித்து வைப்பதில் சமீபகாலமாக திணறி வந்த டோனி, தற்போதைய ஐபிஎல் போட்டியில் என்னால் முடியும் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், டோனி மனரீதியாக தீவிரமாக உள்ளார், தொடருக்கு நீண்ட நாட்கள் முன்பாகவே அவர் பயிற்சியில் ஈடுபடத்தொடங்கி விட்டார்.

நாங்கள் எல்லாம் மைதானத்திற்கு வருவதற்கு முன்பே அவர் வந்துவிடுவார். அதன் பின் ஏகப்பட்ட ஷாட்டுகளை அடித்து பயிற்சி மேற்கொள்வார்.

சிங்கில்கள் எடுக்கும் போது அவர் முனைப்பு குறைவாக இருக்கும். அதே சமயம் பெரிய ஷாட்டுகளை ஆடிவிட்டால் 100 சதவீதம் கட்டுப்பாட்டுடன் வாழ்வார்.

இப்போ எல்லாம் அவர் பாசிடிவ் முனைப்பைத் தான் காட்டுகிறார். அவரது கால்நகர்த்தல்கள் கூட மிகவும் பாசிடிவ்வாக உள்ளன.

நாங்களெல்லாம் வருவதற்கு முன்பாகவே அவர் வந்து விடுவார், ஏகப்பட்ட பந்துகளை அடித்து பயிற்சி மேற்கொள்வார். பெரிய அளவில் பந்துகளை எதிர்கொண்டு ஆடிப் பயிற்சி மேற்கொள்வார். அவர் தன் முனைப்பில் கவனம் செலுத்துபவர்.

பினிஷிங் திறன் மீண்டும் அவரிடமே வந்து சேர்ந்துள்ளது. இது பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது, இந்த இடத்துக்கு வருவதற்கு அவர் கடினமக உழைத்துள்ளார்.

டோனியின் இந்த அசுர வளர்ச்சி எங்களுக்கு நல்லது ஆனால் டோனிக்கு எதிராக கடைசி கட்டத்தில் பந்து வீசும் வீரர்களுக்கு அபாயமானது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்