கடைசி ஓவரில் கோட்டை விட்ட பஞ்சாப்: பிளே ஆப் சுற்றை கெத்தாக தக்க வைத்துக் கொண்ட மும்பை

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை தக்க வைத்துக் கொண்டது.

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து மும்பை அணிக்கு துவக்க வீரராக சூர்யகுமார் யாதவ், ஈவின் லிவிஸ் களமிறங்கினர்.

யாதவ் 27, லீவிஸ் 9, இஷான் கிஷன் 20, அணியின் தலைவர் ரோகித் சர்மா 6 என வந்த வேகத்தில் பெளலியன் திரும்ப, ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார் பொல்லார்டு.

க்ருணல் பாண்ட்யாவுடன் ஜோடி சேர்ந்த பொல்லார்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் சரிவிலிருந்து மும்பை அணியின் ரன் விகிதம் எகிறத் துவங்கியது.

க்ருணல் பாண்ட்யா 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, பொல்லார்டு அரைசதம் அடித்து 50 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொதப்ப மும்பை அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட் ரூ டை 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கெய்ல் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, அடுத்து வந்த ஆரோன் பின்ச், ராகுலுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடி 100 ஓட்டங்களுக்கு மேல் குவித்த நிலையில் பின்ச் 46 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப, கே.எல்.ராகுல் மட்டும் தனி ஒருவனாக போராடினார்.

இருப்பினும் அவர் 94 ஓட்டங்களில் வெளியேற ஆட்டம் அப்படியே மும்பை அணி பக்கம் மாறியது. கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது பஞ்சாப் அணி 13 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததால், 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப் அணி அடுத்து வரும் போட்டியில் கட்டாய வெற்றியையும், அதிக ரன் ரேட் வித்தியாச்த்திலும் வெற்றி பெற வேண்டிய அவசியத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்