பந்தை சேதப்படுத்தி தடைபெற்ற அவுஸ்திரேலிய வீரர் விளையாடுவதற்கு மீண்டும் அனுமதி

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்கா தொடரில் பந்தை சேதப்படுத்தி தடைபெற்ற பான்கிராப்ட், கிளப் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கிரிக்கெட் அவுஸ்திரேலியா அனுமதி அளித்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் 3-வது டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள்.

இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.

இந்நிலையில் கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட ஸ்மித், வார்னருக்கு நியூ சவுத் வேல்ஸ் அனுமதி அளித்தது.

இதையடுத்து பான்கிராப்டும் கிளப் கிரிக்கெட்டில் விளையாட வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா தற்போது அனுமதி அளித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்