டிவில்லியர்சை மிரள வைத்த டோனியின் ஸ்டம்பிங்

Report Print Santhan in கிரிக்கெட்

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியின் போது டிவில்லியர்சை டோனி ஸ்டம்பிங் செய்தது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்யும் அணிகள் வரிசையில் சென்னை அணியும் உள்ளது. அதிலும் குறிப்பாக டோனி ஆட்டம் பேட்டிங் மற்றும் துடுப்பாட்டத்தில் மிக அற்புதமாக உள்ளது

இதை பெங்களூரு அணிக்கான 35-வது லீக் போட்டியின் போது பார்க்க முடிந்தது. அந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் குறித்த போட்டியின் போது டோனி செய்த ஸ்டம்பிங் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஆட்டத்தின் 7-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வீச, அதை அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் எதிர்கொண்டார்.

அப்போது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் அடிக்க முயன்ற போது டிவில்லியர்சின் காலானது கிரீசிற்கு வெளியே சென்றது. அடுத்த நிமிடம் அவர் காலை கிரீசிற்குள் வைப்பதற்குள் டோனி தன்னுடைய அற்புதமான வேகத்தால் ஸ்டம்பிங் செய்தார்.

இதைக் கண்ட டிவில்லியர்ஸ் ஒன்றுமே சொல்ல முடியாமல் 1 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பெளலியன் திரும்பினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers