டோனியை கண்முன் கொண்டு வந்த இஷான்: கொல்கத்தா போட்டியில் பறந்த ஹெலிகாப்டர் ஷாட்

Report Print Santhan in கிரிக்கெட்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் அடித்த ஹெலிகாப்டர் ஷாட் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை- கொல்கத்தா அணிகளுக்கிடையேயான 41-வது லீக் போட்டி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இப்போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பை அணியின் இளம் வீரரான இஷான் கிஷான் 21 பந்துகளுக்கு 62 ஓட்டங்கள் குவித்தார்.

இதில் 6 சிக்ஸர் 5 பவுண்டரிகளை பறக்கவிட்டிருந்தார். இந்நிலையில் இப்போட்டியின் போது குல்தீப் யாதவ் வீசிய ஓவரில் இஷான் கிஷான் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்ஸர் பறக்கவிட்டார்.

அந்த ஷாட்டை பார்த்த வர்ணனையாளர்கள் அப்படியே டோனியின் ஷாட் போன்றே இருந்ததாக கூறினர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் சென்னை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியின் போது டோனி, கிஷானுக்கு ஹெலிகாப்டர் ஷாட் எப்படி அடிப்பது மற்றும் கீப்பிங் எப்படி செய்வது என்று சொல்லிக் கொடுத்திருந்த நிலையில், டோனி சொன்னதை உடனடியாக புரிந்து கொண்டு கொல்கத்தா போட்டியில் இஷான் சிக்ஸர் அடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்