ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போடுவதற்கு இவர் தான் காரணம்: முகத்தை காட்டிய அந்த நபர் யார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் போடுவதற்கு உதவுவது தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தற்போது பல்வேறு மாநிலங்களில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் திரும்பியுள்ள சென்னை அணி பட்டையை கிளப்பி வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் தன்னுடைய தமிழ் டுவிட்டால் டிரண்டாகி வருகிறார்.

இதனால் ஹர்பஜனுக்கு தமிழில் டுவிட் போட சொல்லிக் கொடுப்பது யார், அவர் எங்கு இருக்கிறார், முதலில் அந்த அட்மினை பார்க்க வேண்டும் என்று இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் கூறி வந்தனர்.

அவர்களுக்கு எல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது. ஹர்பஜனுக்கு அட்மின் என்று எல்லாம் கிடையாதாம், அவருடைய டுவிட்டர் அக்கவுண்டை அவரே தான் பயன்படுத்துவாராம்.

சமீபகாலமாக வரும் தமிழ் டுவிட்டிற்கு தமிழகத்தின் திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தான் உதவுவது தெரியவந்துள்ளது.

துபாயில் வேலை பார்த்து வரும் இவர் ஹர்பஜன் சிங்கின் தீவிர ரசிகர், சரவணனின் கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்டு முதலில் டுவிட்டரில் பேச ஆரம்பித்த ஹர்பஜன் அதன் பின் அவரை தன்னுடைய நண்பர் போல் பார்த்து வந்தார்.

திண்டுக்கல்லில் பஞ்சாப் அணிக்காக ஹர்பஜன் விளையாட வந்த போது, சரவணனை அழைத்து ஹர்பஜன் பேசியிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்தன.

இது குறித்து சரவணன் கூறுகையில், ஹர்பஜன் அக்கவுண்டை அவர் தான் பார்த்துக் கொள்வார் எனவும், அவருக்கு என்று அட்மின் கிடையாது.

நான் போட்டி முடிந்த பின்பு தமிழில் மெசேஜை பார்வேர்ட் பன்னுவேன், அதன் பின் அதை அவர் ஆங்கிலத்தில் கேட்டு முழுவதும் தெரிந்த பின்பு பிடித்திருந்தால் மட்டுமே டுவிட்டரில் போடுவார் என்றும் இதே போன்று திருவிழாக் காலங்களிலும் தமிழில் சொல்வேன், அதை அவர் கேட்டு பின்பு ஏற்றுக் கொள்வார் என்று தெரிவித்துள்ளார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers