அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களில் முதலிடம்: ருத்ரதாண்டவம் ஆடிய இளம்வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக சதம் விளாசி, இந்த சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்றைய ஐபிஎல் போட்டியில் மோதின.

முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய டெல்லி அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

36 பந்துகளில் அரைசதம் கடந்த ரிஷப் பண்ட், அதனைத் தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி என அமர்க்களப்படுத்தினார்.

தனி ஆளாய் நின்று சிக்ஸர்களை விளாசிய பண்ட், 56 பந்துகளிலேயே சதமடித்து அசத்தினார். இறுதியில் அவர் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 128 ஓட்டங்கள் குவித்தார். இந்த சதம் ஒட்டுமொத்த ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 50வது சதமாகும்.

அத்துடன் சீசனில் இது 3வது சதமாகும். மேலும், ரிஷப் பண்ட் மொத்தமாக 521 ஓட்டங்கள் குவித்துள்ளதால், இந்த சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து, ஆரஞ்ச் நிற தொப்பியையும் பெற்றுள்ளார்.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers