ஹெலிகாப்டர் ஷாட் குறித்து டோனி சொன்னது என்ன? விளக்கம் கொடுத்த இஷான்

Report Print Santhan in கிரிக்கெட்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன் அணியி விக்கெட் கீப்பரான இஷான் கிஷான் திடீர் விஸ்வரூபம் எடுத்து 21 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

அவரின் இந்த அதிரடி மூலம் மும்பை அணி அன்றைய போட்டியில் 210 ஓட்டங்கள் குவித்து 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த அதிரடி குறித்து இஷான் கிஷான் கூறுகையில், போட்டியின் போது ரோகித் உன்னுடைய 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தின் போது இருக்கும் ஆட்டத்தை இப்போது பார்க்க முடியவில்லையே. நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து.

சீக்கிரம் விக்கெட்டுகள் வீழுந்தாலும், பின்னால் வரும் வீரர்கள் பக்கபலமாக இருப்பார்கள் என்று கூறினார். அதுமட்டுமின்றி சுழற்பந்து வீச்சுகளை எப்படி சமாளிக்க வேண்டும் எனவும் கற்றுக் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து டோனியின் ஆலோசனை பெரிதும் உதவியதாகவும், அவர் கீப்பிங் எப்படி செய்வது ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவது குறித்தும் எனக்குப் பயிற்சி அளித்தார்.

அவரிடம் இருந்து ஹெலிகாப்டர் ஷாட்களை ஆடுவது குறித்து நான் கற்றுக்கொண்டேன்.

ஹெலிகாப்டர் ஷாட்களை விளையாடும் முன் பந்துவீச்சை நன்கு கவனி, களத்தின் சூழலை அறிந்துகொள், களத்தில் நிலைப்படுத்திக்கொள் என்று கூறியதாகவும் இஷான் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...