பஞ்சாப் அணியின் வெற்றிக்காக நடிகை பிரீத்தி ஜிந்தா செய்த செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவிலில் முகத்தை மூடிக் கொண்டு சாமி கும்பிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் பஞ்சாப் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதற்கு முக்கிய காரணம் அணியின் நட்சத்திர வீரர்களான, ராகுல், கெய்ல், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப், தலைவராக அஸ்வினின் சிறப்பான செயல்பாடு என பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் அணி அடுத்த போட்டியில் ராஜஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது.

இதற்கிடையில் பஞ்சாப் அணி வீரர்கள் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்திற்கு மும்பை அணிக்கெதிரான போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த 4-ஆம் திகதி சென்றுள்ளனர்.

அப்போது பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, அங்கிருக்கும் பிரதி பெற்ற Khajrana Ganesh கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது பக்தர்களுடன் பக்தராக சென்ற பிரீத்தி ஜிந்தா முகத்தை மூடிக் கொண்டு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது, பிரீத்தி ஜிந்தா தான் என தெரியவர ரசிர்கர்கள் அவரை சூழ்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.

போட்டி முடிந்த பின்பு கோவிலுக்கு சென்றாரா அல்லது அதற்கு முன்பே சென்றுவிட்டாரா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மும்பை அணிக்கெதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers