கடைசி ஓவரில் கோஹ்லி அணியை வீட்டுக்கு அனுப்பிய புவனேஷ்: முதல் ஆளாக பிளே ஆப்பில் நுழைந்த ஹைதராபாத்

Report Print Santhan in கிரிக்கெட்

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய 39-வது லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் பெங்களூரு அணி கட்டாய வெற்றியை நோக்கி விளையாடியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி சென்னை அணிக்கு ஹைதராபாத் அணியில் ஹேல்ஸ், தவான் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஹேல்ஸ் 5 ஓட்டங்களிலும், தவான் 13 ஓட்டங்களிலும், மணிஷ் பாண்டே 5 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு இணைந்த கேன் வில்லியம்சன் - ஷாகிப் அல் ஹசன் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

கேன் வில்லியம்சன் 39 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷாகிப் அல் ஹசன் 35 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாக ஹைதராபாத் அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 146 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பெங்களூர் அணி சார்பில் முகமது சிராஜ், டிம் சவுத்தி தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

147 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக மனன் வோரா, பர்திவ் படேல் களம் இறங்கினர்.

வோரா 8 ஓட்டங்களிலும், பர்திவ் படேல் 20 ஓட்டங்களிலும் அவுட்டாகினர். அவர்களை தொடர்ந்து இறங்கிய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 30 பந்தில் 39 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். டி வில்லியர்ஸ் 5 ஓட்டங்களிலும், மொயின் அலி 10 ஓட்டங்களிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

இவர்களை தொடர்ந்து ஆடிய மன்தீப் சிங்கும், கிராண்ட்ஹோமும் ஓரளவு தாக்குப் பிடித்து அணியை கடைசி ஓவர் வரைக்கு அழைத்து வந்தனர்.

இதனால் பெங்களூரு அணிக்கு இறுதி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் வீசினார்.

12 ஓட்டங்கள் தானே பெங்களூ அணி அடித்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த போது, அந்த ஓவரில் பெங்களூரு அணியால் வெறும் 6 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணி 10 போட்டிகளில் 3 வெற்றி 7 தோல்வி என பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

இருப்பினும் மற்ற அணிகள் விளையாடும் போட்டியில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்க முடியும்.

மேலும் இந்த வெற்றியின் மூலம் ஹைதரபாத் அணி 10 போட்டிகளில் 2 தோல்வி 8 வெற்றி என 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers