2018 ஐபிஎல் தொடரில் பந்து வீச்சில் அதிக விக்கெட் வீழ்த்தாத சென்னை: பர்பிள் தொப்பியை கைப்பற்றிய மும்பை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில் மும்பை அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா முதலிடத்தில் உள்ளார்.

இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஹார்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் விழ்த்தியதன் மூலம் 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகள் என முதலிடம் பிடித்து பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் வீரர் மார்கண்டே 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தாண்டிற்கான அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான பட்டியலில் முதல் பத்து இடங்களில் சென்னை அணி வீரர்கள் எவரும் இல்லை.

வேகப்பந்து வீச்சாளரான சாருத் தாகூர் 7 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி 16-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers