ஐபிஎல் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய இந்திய வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்து புதிய மைக்கல்லை எட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய 37-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி வீரர் உத்தப்பா 54 ஓட்டங்கள் எடுத்தார்.

இதில் 17 ஓட்டங்களை எடுக்கும் போது உத்தப்பா புதிய மைல் கல்லை எட்டினார். அவர் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்த ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இதுவரை 153 ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ராபின் உத்தப்பா 4037 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers