ஐபிஎல் வரலாற்றில் சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் என, கிறிஸ் கெய்ல் 600 முறை பந்தை பவுண்டரிக்கு அனுப்பியுள்ளார்.

பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் 11 சீசனிலும் சேர்த்து, 600 முறைக்கு மேல் பந்தை பவுண்டரி எல்லைக்கு வெளியே அனுப்பி சாதனை படைத்துள்ளது. இதில் 314 பவுண்டரிகள், 290 சிக்ஸர்கள் அடங்கும்.

சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா 430 பவுண்டரிகள், 181 சிக்ஸர்கள் என 611 முறை பந்தை பவுண்டரி எல்லைக்கு அனுப்பி முதலிடத்தில் உள்ளார்.

பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி 414 பவுண்டரிகள், 172 சிக்ஸர்கள் என 586 முறை பந்தை பவுண்டரிக்கு அனுப்பியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 375 பவுண்டரிகள், 183 சிக்ஸர்கள் என 558 முறை பந்தை பவுண்டரிகள் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அதிக சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை படைத்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers