யாராவது ஒருத்தர் களத்துல நின்னா போதும்: வெற்றி மகிழ்ச்சியில் பேசிய அஸ்வின்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற நிலையில் அது குறித்து அணித் தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

38-வது லீக் போட்டியில் பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

அந்த அணியின் கே.எல் ராகுல் 54 பந்துகளில் 84 ஓட்டங்கள் குவித்தார்.

வெற்றிக்கு பின்னர் பேசிய பஞ்சாப் அணித் தலைவர் அஸ்வின், கடந்த சில போட்டிகளில் நாங்கள் வெற்றி பெறாததால் புள்ளிப்பட்டியலில் முன்னேற முடியவில்லை.

இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளோம்.

ஒரு துடுப்பாட்ட வீரர் கடைசி வரை களத்தில் நின்றால் போதுமானது, இது அணி அடுத்த சுற்றுக்கு செல்ல உதவும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers