கைக்கு வந்த கேட்ச்சை கோட்டை விட்ட மார்கண்டே: மிகவும் கோபப்பட்ட ஹார்திக் பாண்ட்யா

Report Print Santhan in கிரிக்கெட்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது கையில் வந்து விழுந்த கேட்சை மார்கண்டே தவறவிட்டதால், பாண்ட்யா மிகவும் ஆத்திரப்பட்டார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது மும்பை அணி நிர்ணயித்த 182 ஓட்டங்களை விரட்டிய போது, கொல்கத்தா அணியின் துவக்க வீரர் லின்(17) ஓட்டங்கள் எடுத்து வெளியேறிய போது உத்தப்பா மூன்றாவது வீரராக வந்தார்.

லின்னைத் தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் சுப்மன் கில் 7 என வெளியேற கொல்கத்தா அணி 28 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்ததால் மும்பை அணியினர் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து நானும் சீக்கிரம் கிளம்புகிறேன் என்பது போல ஆட்டத்தின் 6-வது ஓவர் வீசிய ஹார்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் உத்தப்பா, லெக் ஸ்டிரைட்டில் நின்று கொண்டிருந்த மார்கண்டேவுக்கு அழகான கேட்ச் கொடுத்தார்.

இந்த கேட்சை பிடித்து விடுவார் என மும்பை வீரர்கள் மகிழ்ச்சியில் இருந்த போது மார்கண்டே பிடிக்காமல் தவறவிட்டதால், பந்து வீச்சாளர் பாண்ட்யா மிகவும் கோபமாக காணப்பட்டார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட உத்தப்பா 35 பந்தில் 54 ஓட்டங்கள் குவித்தார். இப்போட்டியில் கொல்கத்தா அணி தோற்றதால் மார்கண்டே தப்பித்தார், இல்லையென்றால் மும்பை அணியின் தோல்விக்கு மார்கண்டே விட்ட கேட்ச் தான் காரணம் என்று கூறியிருப்பர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers