இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்காவுக்கு எச்சரிக்கை

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறும் மாகாண கிரிக்கெட்டில் கலந்து கொள்ள லசித் மலிங்கா உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஐபிஎல் தொடரில் மலிங்காவை எந்த அணியும் ஏலத்தில் வாங்காத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அறிவுரையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இலங்கையில் நான்கு மாகாண அணிகள் பங்கேற்று விளையாடும் 50 ஓவர்கள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

இதில் ஒரு அணியான தம்புள்ளை அணிக்காக விளையாட மலிங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அவர் இன்னும் இலங்கைக்கு திரும்பாமல் இந்தியாவிலேயே உள்ளார்.

இதையடுத்து மலிங்கா உடனடியாக இலங்கைக்கு திரும்பி மாகாண கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும், இல்லையெனில் தேசிய அணியில் மீண்டும் இடம்பிடிப்பதை பற்றி அவர் நினைக்க முடியாது என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் சுமதிபால கூறுகையில், மலிங்கா திரும்ப வரவேண்டும் என தெரிவாளர்கள் விரும்புகிறார்கள்.

அவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். அடுத்து நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்கா தொடர் மற்றும் ஆசிய தொடருக்கு முன்னர் மலிங்கா 50 ஓவர் மற்றும் டி20 போட்டிகளில் ஆட வேண்டும், இல்லையேல் அவர் அணிக்கு திரும்புவது கடினம் என கூறியுள்ளார்.

சமீபத்தில் மலிங்கா ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நான் தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராக உள்ளேன், ஆனால் உள்ளூர் போட்டியில் விளையாட மாட்டேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers