மிக மோசமான சாதனையை படைத்த மும்பை அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் 2018 சீசனில் மும்பை அணியை சேர்ந்த வீரர்கள் 12 முறை ’Duck Out' ஆகி மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

ஐ.பி.எல் தொடரின் 31வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் முதல் ஆடிய பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய மும்பை அணியில், இஷான் கிஷான் முதல் ஓவரிலேயே ’Duck Out' ஆனார். இந்த சீசனில் மட்டும் அவர் இது போன்று மூன்று முறை ஆட்டமிழந்துள்ளார். கடந்த போட்டியில் கிஷானும், சூர்யகுமார் யாதவும் ‘Duck Out'ஆகினர்.

இஷான் கிஷானைத் தொடர்ந்து, களமிறங்கிய மும்பை அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா ‘Golden Duck Out'ஆனார். அவர் இரண்டாவது முறையாக இந்த சீசனில் ’Duck Out'ஆகியுள்ளார். மேலும், ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை 9 முறை ‘கோல்டன் டக்-அவுட்’ ஆகியுள்ளார்.

இந்நிலையில், இந்த சீசனில் மும்பை அணியைச் சேர்ந்த 12 வீரர்கள்’Duck Out'ஆகி, புதிய சாதனையை படைத்துள்ளனர். அவர்களில் 8 பேர் ‘Golden Duck Out'ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தான் மிகவும் குறைவாக 2 பேர் மட்டுமே 'Duck Out' ஆகியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers