இப்ப என்ன சொல்லப் போறீங்க? அனுஷ்காவை திட்டியவர்களுக்கு பதிலடி கொடுத்த கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு தலைவராக உள்ளார்.

இவர் தலைமையிலான பெங்களூர் அணி சொதப்பியே வருகிறது. கோஹ்லியைத் தவிர மற்ற வீரர்கள் அந்த அளவிற்கு விளையாடுவதில்லை.

இத்தொடரின் போது சென்னை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி 200-ஓட்டங்களுக்கு மேல் குவித்தும் அந்த போட்டியில் பெங்களூ அணி தோல்வியை சந்தித்தது.

இதனால் ரசிகர்கள் அனைவரும் இதற்கு எல்லாம் காரணம் அனுஷ்கா சர்மா தான், அவர் மைதானத்திற்கு வந்து கிரிக்கெட் பார்க்காமல் இருந்தாலே பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் நல்ல இடத்திற்கு வந்துவிடும் என்று இணையவாசிகள் சமூகவலைத்தளங்களில் அவர் தொடர்பான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ட்ரோல் செய்தனர்.

அதிலுல் சிலர் அனுஷ்காவை விவாகரத்து செய்வது தான் கோஹ்லிக்கு நல்லது என்றும் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்றைய மும்பை அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இப்போட்டியை பார்ப்பதற்கு அனுஷ்கா சர்மாவு வந்திருந்தார். அவர் வந்திருந்த போதும் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி நேற்று அனுஷ்கா சர்மாவிற்கு பிறந்த நாள், இந்த வெற்றிக்கு பின்னர் அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகின் மிகச் சிறந்த தைரியமுள்ள மனிதனிடம் என்னுடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...