டோனிக்காக தன்னுடைய சொந்த ஊரையே தூக்கி எறிந்த பெண்: குலுங்கிய மைதானம்

Report Print Santhan in கிரிக்கெட்

பெங்களூரு அணிக்கெதிரான போட்டியின் போது இளம் பெண் ஒருவர் டோனி வந்தவுடன் சென்னை அணியின் டீ சர்ட்டை அணிந்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், டோனி தலைமையிலான சென்னை அணியும் மோதின.

இப்போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 205 ஓட்டங்களை சென்னை அணி எட்டிப் பிடித்து சாதனை படைத்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னை அணியின் தலைவரான டோனி 34 பந்துக்கு 70 ஓட்டங்கள் குவித்தார்.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் போது டோனி மைதானத்தில் களமிறங்கும் போது கவுண்டவுன்1..2..3 என்று சொல்லப்பட்டது.

அப்போது மைதானத்தில் இருந்த பெண் ரசிகர் ஒருவர் உடனடியாக தன்னுடைய சொந்த ஊரான பெங்களூரு அணியின் டீ சர்ட்டை தூக்கி எறிந்துவிட்டு சென்னை அணியின் டீ சர்ட்டை எடுத்து அணிந்து கொண்டார்.

இவர் மட்டுமின்றி டோனி மைதானத்தில் இறங்கியவுடன் அங்கிருந்த பெரும்பாலானோர் டோனிக்கு ஆதரவாக கத்தியதால் மைதானமே அப்போது குலுங்கியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers