மின்னல் மனிதன் உசேன் போல்டை விட வேகமாக ஓடும் டோனி: வைரல் வீடியோ

Report Print Athavan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் டோனி வேகமாக பவுண்டரியை தடுக்க ஓடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இந்நிலையில் தற்போது அந்த வீடியோவில் டோனி எவ்வளவு வேகத்தில் ஓடினார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு வீரர் Quinton de Kock அடித்த பந்து விக்கெட் கீப்பர் பின் பக்கம் சென்றது, அந்த பந்தை தடுப்பதற்காக டோனி வேகமாக ஓடினார்.

அப்போது மணிக்கு 200 கிமீ என்ற வேகத்தில் டோனி ஓடிச்சென்று அந்த பந்தை தடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோனி வேகமானவர் என்று கருத்து கிரிக்கெட் உலகில் உள்ளது.

பொதுவாக பேட்டிங் செய்யும் போது டோனியை எடுத்துக் கொண்டால் அவர் 20 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக் கொள்கிறார்.

ஆனால் தடகள வீரர் உசேன் போல்ட் முதல் 20 மீட்டர் தூரத்தை கடக்கவே 2.89 நொடிகள் எடுத்துக் கொள்கிறார், இது டோனியை விட குறைவான நேரம் ஆகும் என்றுள்ளனர்.

காலில் பேட் கட்டிக் கொண்டு, கிளஸ் அணிந்து கிரிக்கெட் மட்டையுடன் இந்த வேகம் டோனி ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers