ஆப்கானிஸ்தான் அணியை அவமானப்படுத்துகிறாரா கோஹ்லி? பிசிசிஐ கருத்து

Report Print Athavan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டியில் விளையாட வரும்போது அணியின் அதிகாரப்பூர்வ கேப்டன் இல்லாமல் இருந்தால், அது அந்த அணியை அவமானப்படுத்தும் செயல் என பிசிசிஐ கருதுகிறது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூன் 14-ம் தேதி பெங்களூருவில் இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுகிறது.

ஆனால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பங்கேற்க மாட்டார் என கருதப்படுகிறது.

இதுகுறித்து பேசிய பிசிசிஐ-ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவுக்கு முதல் முறையாக டெஸ்ட்போட்டி விளையாட ஆப்கானிஸ்தான் அணி வருகிறது.

ஜூன் 14ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ள இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் சிறிய அணியாக இருந்தாலும், தகுந்த மதிப்பு அளிக்க வேண்டும்.

ஆனால், அந்த நேரத்தில் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து கவுண்டி அணியுடன் விளையாடச் செல்வது ஆப்கானிஸ்தான் அணியை அவமானப்படுத்துவது போல் ஆகும்.

இதனால் இந்திய அணி கிரிக்கெட் உலகிற்கு ஒரு மோசமான செய்தியை வெளிப்படுத்தும் செயல் போல் இது அமைந்துவிடும்.

எனவே இங்கிலாந்து கவுண்டி அணியில் விராட் கோஹ்லி விளையாடினாலும், உரிய அனுமதி பெற்று வந்து ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் விளையாடவேண்டும்.

அந்நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் போன்று நடைபெற்றால் கோஹ்லி விளையாடாமல் இருப்பாரா எனும் கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டின் போது இந்திய அணியில் விராட் கோஹ்லி பங்கேற்க அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers