கால்பந்து போட்டியை போல் கிரிக்கெட்டிலும் வர உள்ள விதிமுறை: ஐசிசி பரிந்துரை

Report Print Kabilan in கிரிக்கெட்

மைதானத்தில் பந்தை சேதப்படுத்தினால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றும் கால்பந்து போட்டிக்கான விதியை, கிரிக்கெட்டிலும் அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக ஐசிசி-யின் தலைமை நிர்வாகி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஐசிசி-யின் தலைமை நிர்வாகி, மைதானத்தில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் வீரர்களுக்கு சிவப்பு, மஞ்சள் அட்டைகள் காட்டும் முறை பின்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், நடுவர்களுக்கு கூடுதல் அதிகாரம் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அனில் கும்ப்ளேவின் குழு சார்பில் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஜூன் மாத கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகளிடையேயான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

IANS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers