கிரிக்கெட் விதியை அப்பட்டமாக மீறிய பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது விக்கெட் கீப்பர் ராகுலின் கிளவுஸை கெய்ல் போட்டுக் கொண்டு கிரிக்கெட் விதியை மீறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில் ஐதராபாத் பேட்டிங் செய்த போது 6வது ஓவரை பரீந்தர் சரன் வீசினார். 5.2வது பந்தில் சகிப் அல் ஹசன் அவுட்டானார்.

ஆனால் அது நோ-பால் என அம்பயர் தெரிவிக்க, அதை 3வது அம்பயர் பார்த்து சொன்னார்.

அப்போது பஞ்சாப் அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த கே எல் ராகுல் டிரெஸ்ஸிங் ரூம் வரை சென்று வந்தார்.

அந்த சமயத்தில் ராகுலின் விக்கெட் கீப்பிங் கிளவுஸை பஞ்சாப் வீரர் கெய்ல் எடுத்து கையில் மாட்டிக் கொண்டார்.

இதையடுத்து பார்வையாளர்கள் அனைவரும் கெய்ல் தான் கீப்பிங் செய்யப்போகிறார் என நினைத்தனர்.

பின்னர் தான் தெரிந்தது, அவர் நகைச்சுவைக்காக அணிந்து கொண்டார் என்று, இதையடுத்து மைதானத்துக்குள் வந்த ராகுலிடம் கிளவுசை கெய்ல் கொடுத்தார்.

ஐசிசி கிரிக்கெட் 27.1வது விதிமுறைப்படி இப்படி கீப்பரின் கிளவுஸை வேறு எந்த வீரரும் அணியக் கூடாது. அப்படி அணிந்தால் அதற்கு பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ஓட்டங்கள் அபராத ஓட்டங்களாக வழங்கப்படும்.

இருப்பினும் ஐபிஎல் போட்டியில் இந்த விதியை நடுவர்கள் மறந்து விட்டனர் போலும், ஏனெனில் அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers