இந்த அடி சொல்லியிருக்குமே டோனி யாருனு? கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடிக் கொடுத்த பிராவோ

Report Print Santhan in கிரிக்கெட்

விளையாட்டில் வயது முக்கியமில்லை திறமை தான் முக்கியம் என்பதை கெய்ல் மற்றும் டோனி நிரூபித்துவிட்டதாக பிராவோ கூறியுள்ளார்.

பஞ்சாப்-சென்னை அணிகளுக்கிடையேயான போட்டியில் கிண்டல் செய்யப்பட்டு வந்து இரண்டு வீரர்கள் தங்களுடைய பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்தனர்.

அதில் முதலாவது வீரர் தான் கிறிஸ் கெய்ல், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கெய்லை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை, அதன் பின் கடைசி கட்ட ஏலத்தின் போது பஞ்சாப் அணி அவரை எடுத்தது.

கெய்லின் ஆட்டம் முன்பு போல் இல்லை, அவருக்கும் வயது 38-ஆகிவிட்டது. இனி அவருடைய அதிரடியை பார்க்க முடியாது என்று பலரும் கூறி வந்தனர்.

இதே போன்று சென்னை அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்தவர்களே இருந்தால், சென்னை அணியையும் பலரும் கிண்டல் செய்தனர்.

அதிலும் குறிப்பாக 36 வயதான டோனி எப்படி பினிஷிங் செய்து கொடுப்பார் என்று எல்லாம் கிண்டல் செய்தனர். இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், கெய்ல் 33 பந்துகளுக்கு 63 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

நான் மட்டும் என்ன சும்மாவா என்பது போல் டோனி இரண்டாவது துடுப்பாட்டத்தின் போது 44 பந்துக்கு 79 ஓட்டங்கள் குவித்தார். இப்போட்டியில் சென்னை தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் சென்னை அணி வீரர் டேவைன் பிராவோ தன்னுடைய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கெய்ல் மற்றும் டோனியின் வயதைப் பற்றி பலரும் கூறி கிண்டல் செய்து வந்தனர். ஆனால் நேற்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை காட்டியதே அந்த இரண்டு வீர்கள் தான், விளையாட்டில் வயது முக்கியமில்லை திறமை தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers