சென்னை அணி தோல்வியடைந்தாலும்.. டோனிக்கு கிடைத்த புதிய ஹாட்ரிக்

Report Print Santhan in கிரிக்கெட்

பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது சென்னை தோல்வியடைந்தாலும், டோனிக்கு புதிய ஹாட்ரிக் கிடைத்துள்ளது.

பஞ்சாப்-சென்னை அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த போட்டியில் சென்னை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சென்னை அணியின் வெற்றிக்கு பஞ்சாப் அணி தலைவர் அஸ்வின் முட்டுக் கட்டை போட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது டோனி ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்ற, அந்த ஆட்டங்களில் சிஎஸ்கே மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை களத்தில் இருந்த டோனி 63 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் அப்போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதே போன்று கடந்த 2014-ஆம் ஆண்டும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தின் போது 42 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த போதும், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் கடை வரை வெற்றிக்கு போராட்டிய டோனி 79-ஓட்டங்கள் குவித்தார். இந்த போட்டியிலும் சென்ன அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தார்.

மேலும் இரண்டாவது துடுப்பெடுத்தாடும் போது டோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 15 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers