கோஹ்லி அணியை புரட்டி எடுத்த சஞ்சு சாம்சன்: பெங்களூருவில் அசத்தல் வெற்றி பெற்ற ராஜஸ்தான்

Report Print Santhan in கிரிக்கெட்
286Shares
286Shares
ibctamil.com

பெங்களூரு-ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக ரகானே, ஷார்ட் களம் இறங்கினார்கள்.

ஷார்ட் நிதானமாக விளையாட ராகானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய ரகானே 20 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 36 ஓட்டங்கல் எடுத்து ஆட்டமிழந்தார். ஷார்ட் 11 ஓட்டங்களில் வெளியேறினார்.

அதன்பின் வந்த சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரி அடிப்பதை விட சிக்சரில்தான் கவனம் செலுத்தினார். அவருக்குத் துணையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 21 பந்தில் 27 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 14 பந்தில் 23 ஓட்டங்களும் எடுத்தனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம்சன் 34 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். அதன் பின்னும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய போது அவருக்கு ஈடு கொடுத்து ஆடி வந்த பட்லரும் பெளலியன் திரும்பினார்.

இருப்பினும் ஒன் மேன் ஆர்மியாக கடைசி வரை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் 19-வது ஓவரின் 4-வது பந்தை சிக்ஸருக்கும், 5-வது மற்றும் கடைசி பந்தை பவுண்டரிக்குமாக விரட்டினார்.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பில் சஞ்சு சாம்சன் 92 ஓட்டஙள் எடுத்து கடை வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பெங்களூரு அணியின் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ஓட்டங்கள் எடுத்தது.

218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக பிரண்டன் மெக்குல்லம்-குயிண்டன் டி காக் களமிறங்கினர்.

அதிரடி மன்னனான மெக்குல்லம் 4 ஓட்டங்களிலும், டி காக் 26 ஓட்டங்களிலும் வெளியேற கோஹ்லி ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டார்.

கோஹ்லியும், டிவில்லியர்சும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போது அரைசதம் அடித்திருந்த விராட் கோஹ்லி 57 ஒட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ் 20 ஓட்டங்களில் வெளியேற, ஆட்டம் ராஜஸ்தான் அணி பக்கம் திரும்பியது.

இருந்த போதிலும் கடைசி கட்ட வீரர்களாக வந்த மந்தீப் சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூரு அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 198 ஓட்டங்கள் எடுத்து 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்