அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்: ஆரோன் பிஞ்ச்

Report Print Kabilan in கிரிக்கெட்
127Shares
127Shares
ibctamil.com

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக, அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், துணைத்தலைவர் டேவிட் வார்னர் மற்றும் பேன்கிராப்ட் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணிக்கு தகுந்த வீரரை தலைவராக நியமிக்க, அந்த அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், தலைவர் பதவி வந்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிஞ்ச் கூறுகையில், ‘அவுஸ்திரேலியா தலைவர் பதவிக்காக நான் தயாராக இருக்கிறேன். ஆனால், தற்போது அதுகுறித்து நான் யோசிக்கவில்லை.

இன்னும் இரண்டு மாதங்களில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இந்த வருடத்தின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் டெஸ்ட் தொடர் வருவதால், சரியான வீரர்களை தெரிவு செய்வது அணிக்கு மிகக் கடினமாக இருக்கும்.

தலைவர் பதவிக்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தால் அதை விரும்பி ஏற்றுக் கொள்வேன்’ என தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2016ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவின் டி20 அணிக்கு ஆரோன் பிஞ்ச் தலைவராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்