வலுவிழந்த நிலையில் சென்னை அணி: அஸ்வின் அணியை இன்று சமாளிக்குமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்
333Shares
333Shares
ibctamil.com

சென்னை அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் பஞ்சாப் அணியுடன் சென்னை அணி இன்று மோத உள்ளது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என கிரிகெட் ஆர்வலர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக ரெய்னா இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், டூப்பிளசியும், நிகிடியும் இன்று பங்கேற்க மாட்டார்கள் என சென்னை அணி சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

கடந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதும், அப்போட்டிகளில் இரு முக்கிய வீரர்களை காயத்தால் சென்னை அணி இழந்துள்ளது.

முதல் போட்டியில் கேதர் ஜாதவுக்கு ஏற்பட்ட காயத்தால், அவர் தொடரில் இருந்தே விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அடுத்த போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏற்பட்ட காயத்தால், அடுத்த இரு போட்டிகளுக்கு விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் டூப்பிளசிஸ் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார்.

மேலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் நிகிடியின் தந்தை இறந்துவிட்டதால், அவர் தென் ஆப்பிரிக்கா சென்றுவிட்டார்.

இதுபோன்ற அனுபவம் மிகுந்த வீரர்களை இழப்பது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கடந்த இருபோட்டிகளிலும் வாய்ப்புப் பெறாத முரளி விஜய் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியிலும் பேட்டிங் வரிசை மிகவும் வலுவற்ற நிலையில் இருக்கிறது. கடந்த இருபோட்டிகளிலும் சோபிக்காத யுவராஜ் சிங்குக்கு பதிலாக மனோஜ் திவாரி இந்த போட்டியில் வாய்ப்பு பெறலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை பஞ்சாப் அணி பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது.

எப்படியிருந்தாலும், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்