ஐபிஎல்-லில் இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா? வருத்தப்பட்ட இலங்கை வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
486Shares
486Shares
ibctamil.com

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் மும்பை வீரர் அகில தனஞ்சயா விக்கெட் எதுவும் எடுக்காமல் ஓட்டங்களை வாரி வழங்கியதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

டெல்லி-மும்பை அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

மும்பை மைதானத்தில் சுழற்பந்து எடுபடும் என்பதால் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயா மும்பை அணிக்கான ஆடும் லெவனில் இருந்தார்.

அதன் படி முதலில் ஆடிய மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் எடுத்தது. இதன் பின் 195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ராய், நாலா புறமும் அதிரடி காட்ட அந்த அணி 20 ஓவரில் 195 ஓட்டங்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் மும்பை அணியின் தலைவரான ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயாவுக்கு முதல் பாதியிலே வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால் அகில தனஞ்சயாவின் பந்தை அசால்ட்டாக எதிர் கொண்ட டெல்லி அணி வீரர்கள், ஒரு விக்கெட் கூட கொடுக்காமல் அவரின் மொத்த 4 ஓவரில் 47 ஓட்டங்கள் விளாசினர்.

இப்போட்டியில் சுழற்பந்தில் தனஞ்சாயாவையே மும்பை அணி அதிகம் நம்பியிருந்த நிலையில், அவர் நேற்று ஏமாற்றியது அந்த அணிக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்