சென்னையில் இனி டோனி விளையாட மாட்டார்? வெளியான தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்
426Shares
426Shares
ibctamil.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி இனி சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் டோனி இந்திய அணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளிலிருந்தும் டோனி ஓய்வு பெற்றுவிடுவார் என கூறப்படுகிறது. அதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டோனி விளையாட மாட்டார்.

ஏனெனில் எதிர்வரும் 2019-ல் ஐபிஎல் தொடரானது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.

அதனால் இந்தாண்டு சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடர் தான் டோனி கடைசியாக சென்னையில் விளையாடும் தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்