பெங்களூருக்கு முதல் வெற்றி: கோஹ்லிக்கு முத்தப் பரிசு கொடுத்த அனுஷ்கா சர்மா

Report Print Santhan in கிரிக்கெட்
219Shares
219Shares
ibctamil.com

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது பெங்களூரு அணி வெற்றி பெற்றதால், அனுஷ்கா கோஹ்லிக்கு முத்தத்தை பரிசாக கொடுத்தது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூருவில் நேற்று கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இப்போட்டியில் 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் குவித்து, ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்த போட்டியை பார்ப்பதற்காக கோஹ்லியின் மனைவியான அனுஷ்கா சர்மா வந்திருந்தார். அது என்னவோ தெரியவில்லை அனுஷ்கா சர்மா வந்ததாலோ என்னவோ கோஹ்லியின் ஆட்டம் அந்த அளவிற்கு இல்லை.

நேற்றைய போட்டியின் போதும் 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில், மோசமாக போல்டாகி கோஹ்லி பெளலியன் திரும்பினார். இருப்பினும் டிவில்லியர்சின் அதிரடியைக் கண்ட அனுஷ்கா கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றவுடன் கோஹ்லி மைதானத்திற்கு வந்தார், அப்போது கோஹ்லியைக் கண்ட அனுஷ்கா சர்மா அவருக்கு முத்தத்தை பரிசாக கொடுத்தார்.

அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்