இரண்டாவது தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை: கலங்கிய மும்பை அணித் தலைவர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இரண்டாவது தோல்வியை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின.

கடைசி கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இப்போட்டியில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின்னர் பேசிய மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா, தொடர் ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளது. பிட்ச் வேறு ரகமாக உள்ள நிலையில் நாங்கள் எங்களை அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளவில்லை. இரண்டாவது முறையும் நெருக்கமாக வந்து தோற்றதை ஜீரணிக்க முடியவில்லை.

இன்னும் நாங்கள் கொஞ்சம் பொறுப்பாக ஆடியிருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்