பஞ்சாப் அணித்தலைவராக அஸ்வின் செயல்பாடு எப்படி? நட்சத்திர வீரர் விமர்சனம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பஞ்சாப் அணியின் தலைவராக அஸ்வின் செயல்பாடு குறித்து சக வீரர் டேவிட் மில்லர் பேசியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கடந்த 7-ஆம் திகதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் தலைவர்களாக உள்ளனர்.

குறிப்பாக பஞ்சாப் அணிக்கு அஷ்வினும், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், ராஜஸ்தான் அணிக்கு ரகானேவும் முதல் முறையாக தலைவர்களாக பங்கேற்கின்றனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அஷ்வின் குறித்து பஞ்சாப் அணி வீரர் டேவிட் மில்லர் கூறுகையில், அவருடன் பங்கேற்ற போட்டியில் நான் தெரிந்து கொண்ட விடயம் என்னவென்றால், அவர் மிகவும் கச்சிதமாக கணிக்ககூடியவர்.

ஒவ்வொரு நொடியும் எப்படி வெற்றி பெறுவது என சிந்தித்துக் கொண்டே இருப்பார். அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கு பின், நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்