பரபரப்பை கூட்டிய கடைசி ஓவர்: மும்பையை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

மும்பை அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய 7-வது போட்டியில் மும்பை-ஹைதராபாத் அணிகள் மோதின. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற ஹைதரபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன் படி மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா-லிவிஸ் களமிறங்கினர். ஹைதரபாத் அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் மும்பை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன.

இறுதியாக மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக லெவிஸ் 29 ஓட்டங்களும், சூர்யகுமார் யாதவ், போலார்டு ஆகியோர் தலா 28 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஹைதராபாத அணி சார்பில் சந்தீப் சர்மா, பில்லி ஸ்டான்லேக், சித்தார்த் கவுல் தலா 2 விக்கெட்டும், ரஷித் கான், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

148-ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணிக்கு துவக்க வீரர்களாக சகா-தவான் களமிறங்கினர். சகா 22 ஓட்டங்களிலும், தவான் 45 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஹோடா மட்டும் நிலைத்து நின்று அணியை வெற்றி பெற வைப்பதற்கு போராடினார்.

இதனால் கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மீதமிருந்ததால் அந்த விக்கெட்டை மும்பை அணி வீழ்த்தி விடும் என்று நினைத்த போது ஹோடா 6 சிக்ஸர் அடித்து ஆட்டத்தை தலை கீழாக மாற்றினார்.

இறுதியாக ஹைதரபாத் அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து 151 ஓட்டங்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers