ஐபிஎல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியின் தலைவரான தினேஷ் கார்த்திக்கும், பஞ்சாப் அணியின் தலைவரான ரவிச்சந்திரன் அஸ்வினும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்றும் உள்ளூர் தொடரான ஐபிஎல் இந்தாண்டு ஏப்ரல் 7ஆம் திகதி துவங்கியது.

இதில் சென்னை-மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியே ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்ததால், ஐபிஎல் இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் முதல் போட்டியில் பஞ்சாப்-டெல்லி அணிகள் மோதின.

இதில் பஞ்சாப் அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தலைவராக உள்ளார். இப்போட்டியில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியாக கொல்கத்தா-பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கொல்கத்தா அணிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும், பெங்களூரு அணிக்கு கோஹ்லியும் தலைவராக உள்ளார்.

கோஹ்லியை தினேஷ் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று நினைத்த போது சூறாவளியாய் கிளம்பிய நரைன் 19 பந்தில் 50 ஓட்டங்கள் குவித்து கொல்கத்தா அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.

இதை இணையவாசிகள் ஒரே நாளில் இரண்டு தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers