இவரை எடுக்காமல் விட்டது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய இழப்பு: இந்திய வீரர் வேதனை

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்காமல் விட்டதை அந்தணி உணரும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான அனில் கும்ளே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது 11-வது ஐபிஎல் சீசன் துவங்கிவிட்டது. இன்றைய முதல் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.

நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கு மும்பை, இரண்டு ஆண்டுகளுக்கு தடைக்கு பின் களமிறங்கும் சென்னை இரு பலம் வாய்ந்த அணிகள் களமிறங்கவுள்ளதால், ஐபிஎல்லின் முதல் போட்டியே ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்து தான்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 10-ஆண்டுகளாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விளையாடி வந்தார்.

ஆனால் இந்தாண்டு ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் மும்பை ஆலோசகருமான அனில் கும்ளே கூறுகையில்,

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இல்லாததை நிச்சயமாக உணரும். .

அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் இருந்தபோதிலும், அவர் அனுபவமற்றவர். ஹர்பஜன் போன்ற அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். ஹர்பஜனால் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்பட முடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்