புதிய தீம் பாடலில் நொறுக்கி விட்ட டோனி: வீடியோவை வெளியிட்ட CSK

Report Print Santhan in கிரிக்கெட்

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள சென்னை அணிக்கான புதிய தீம் பாடலில் டோனி மிரட்டலாக நடனம் ஆடியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீசன் துவங்கப்பட்ட ஆண்டில் இருந்தே விளையாடி வந்தது.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்ட விவகாரம் தொடர்பாக தடையில் இருந்த சென்னை அணி இந்த ஆண்டு தடைக்கு பின் மீண்டும் களமிறங்கவுள்ளது.

இதில் நாளைய முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தீம் பாடல் சென்னை அணி தன்னுடைய அதிகார பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அதில் டோனி, பிராவோ, வாட்சன் உள்ளிட்ட வீரர்கள் அசத்தலாக ஆட்டம் போட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்