இதே நாளில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அணி செய்த வரலாற்று சாதனை

Report Print Raju Raju in கிரிக்கெட்
362Shares

கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் திகதி நடைபெற்ற டி20 உலக கிண்ண இறுதி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இன்றுடன் அந்நிகழ்வு நடந்து 4 ஆண்டுகள் முடிகிறது.

குறித்த தொடரின் இறுதி போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் மோதின.

டாக்காவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சை முதலில் தெரிவு செய்தது.

இதையடுத்து துடுப்பாட்டத்தை முதலில் தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 17.5 ஓவர்களில் 134 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்