ஐபிஎல் திருவிழா: காயத்தால் வெளியேறும் முக்கிய வீரர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா விலகியுள்ளார்.

2018-ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 7-ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் தலைவர்களாக உள்ளனர். ஐதராபாத் அணிக்கு மட்டும் வில்லியம்சன் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக பங்கேற்கயிருந்த தென் ஆப்ரிக்க வீரர் ரபாடா, பின்புற முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக திடீரென விலகியுள்ளார்.

ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் போன்ற சில முன்னணி வெளிநாட்டு வீரர்கள் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது .

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்