மும்பை இந்தியன்சின் ரகசியத்தை அறிந்துள்ள ஹர்பஜன்: டோனிக்கு கை கொடுக்குமா?

Report Print Santhan in கிரிக்கெட்
193Shares

ஐபிஎல் தொடரில் பத்து ஆண்டுகள் மும்பை அணிக்காக விளையாடியுள்ளதால், எனக்கு தெரியாத என கூறியுள்ளார்.

இந்தியாவில் 11-வது ஐபிஎல் தொடர் வரும் 7-ஆம் திகதி நடைபெறவுள்ளது. முதல் போட்டியிலே மும்பை-சென்னை அணிகள் மோதவிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடந்த 10 சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் இந்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் கூறுகையில், இதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸும் அணியும் அபாரமான சில ஆட்டங்களில் மோதியுள்ளன.

இந்தப் போட்டிகளில் என்னை நிரூபிப்பது எனக்கு ஆழமான திருப்தியை அளிக்கும்.

10 ஆண்டுகள் மும்பை அணிக்காக ஆடியிருக்கிறேன், எனவே மும்பை இந்தியன்ஸ் ஆடும் கிரிக்கெட் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் ஆடியுள்ளதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை.

மும்பை அணியின் திட்டமிடுதல் குழுவில் நான் இருந்திருப்பதால் மும்பை இந்தியன்ஸ் எப்படி அணுகும் என்பது பற்றி எனக்கு கொஞ்சம் கூடுதலாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

ஹர்பஜன் இப்படி கூறியுள்ளதால், அது டோனிக்கு கை கொடுக்குமா? இல்லையா? என்பது போட்டியின் போது தான் தெரியும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்