சென்னை அணியால் பயத்தில் இருக்கும் இலங்கை அணியின் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்
709Shares

பழைய பரம எதிரிகள் ஐபிஎல் தொடரில் மீண்டும் திரும்பியுள்ளதால், கிண்ணத்தை தக்க வைப்பது கடினம் என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

இந்தியாவில் 11-வது ஐபிஎல் வரும் 7-ஆம் திகதி துவங்கவுள்ளது. இதில் முதல் போட்டியில் சென்னை-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இதில் நடப்பு சாம்பியனான மும்பை அணி கிண்ணத்தை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போராடும் என்று கூறப்படும் நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஜெயவர்த்தனே கூறுகையில்,

நாங்கள் தான் நடப்பு சாம்பியன் தான், இருப்பினும் பழைய பரம எதிரிகள் மீண்டும் திரும்பியுள்ளதால், கிண்ணத்தை தக்கவைப்பது கொஞ்சம் கடினமான செயல்தான். ஆனாலும், எங்கள் அணி சமாளிக்க தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

அவர் பரம எதிரிகள் என்று கூறுவது இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்