என் மீதான தடையை முழுமையாக ஏற்கிறேன்: டேவிட் வார்னர் அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்
181Shares

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தன் மீதான ஓராண்டு தடையை முழுமையாக ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு தடையும், பேன்கிராஃப்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தங்கள் மீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என ஸ்டீவன் ஸ்மித்தும், பேன்கிராப்ஃடும் நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஸ்மித் மற்றும் பேன்கிராப்ஃட் போல தானும் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் மீதான ஓராண்டுத் தடையை முழுமையாக ஏற்பதாக, அவுஸ்திரேலியாவுக்குத் தெரியப்படுத்துகிறேன். என்னுடைய நடவடிக்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சிறந்த மனிதனாக, சிறந்த வீரராக, சிறந்த Role model ஆக இருப்பதற்கான அனைத்து நல்ல விடயங்களையும் இனி நான் செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்