கிரிக்கெட் வீரர்களை சிறை பிடிப்போம் என எச்சரிக்கை! ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது கஷ்டம்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை சிறை பிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் வரும் 7-ஆம் திகதி ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதில் சென்னை அணிக்கான போட்டி வரும் 10-ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இதில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து ஐபிஎல் போட்டி சென்னையில் நடந்தால், அது மக்களை திசை திருப்பிவிடும் என்பதால், சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறக் கூடாது என்று பலரும் கூறி வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ, சென்னையில் வரும் 10-ஆம் திகதி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மக்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு மானக்கேடு என்று கருதுகிறோம்.

போட்டியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால் மைதானத்துக்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம்.

போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களையும் சிறை பிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதால், சென்னையில் சில போட்டிகள் நடைபெறுவது மிகவும் கஷ்டம் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்