மூன்று முறை வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: இந்த முறை விடமாட்டேன் என கோஹ்லி சபதம்

Report Print Santhan in கிரிக்கெட்
388Shares

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி இந்த முறை பெங்களூரு அணிக்கு நிச்சயம் கிண்ணத்தை கைப்பற்றி தருவேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் எட்டு அணிகள் பங்கேற்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருபவர் கோஹ்லி.

இவர் தலைமையிலான இந்திய அணி தற்போது பட்டையை கிளப்பி வருவதால், இந்த முறை இவர் பெங்களூரு அணிக்கு நிச்ச்யம் கிண்ணத்தை கைப்பற்றித் தருவார் என்று பெங்களூரு அணி உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து கோஹ்லி கூறுகையில், ஐபிஎல் தொடர்களில் பெங்களூர் அணியின் துடுப்பாட்டம் எப்போதும் பலமாகவே இருக்கும் என்பதால், இந்த ஆண்டு பந்து வீச்சை வலுப்படுத்த நினைத்தோம்.

அதன் காரணமாக முக்கியமான பந்து வீச்சாளர்களை எடுத்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு விளையாடி வருகிறேன்.

கிண்ணத்தை கைப்பற்றுவதில் ரசிகர்களை விட நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மூன்று முறை கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட நான் இந்த முறை விட்டு கொடுக்கமாட்டேன், கிண்ணத்தை வெல்வதில் உறுதியாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்