தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன்: ஸ்டீவன் ஸ்மித் ட்வீட்

Report Print Kabilan in கிரிக்கெட்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஓராண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்திய, பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓர் ஆண்டும், இளம் வீரர் கேமரூன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர், வீரர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், உள்ளூர் போட்டிகளில் அவர்களை விரைவில் விளையாட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், தன் மீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன் என ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து ஸ்டீவன் ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

இந்த சம்பவத்தை என்றும் மனதில் வைத்திருப்பேன், என் நாட்டிற்காக மீண்டும் விளையாடுவேன். ஆனால், அணியின் தலைவனாக முழு பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்.

தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டேன். அவை ஒரு அழுத்தமான செய்தியை கூற, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் கொடுக்கப்பட்டது. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்