பாகிஸ்தானில் தீவிர கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மேற்கிந்திய தீவுகள் உடனான கிரிக்கெட் விளையாட்டை நேரடியாக காண தமது திருமணத்தையே தள்ளி வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.
பெயர் குறிப்பிடாத அந்த நபருக்கு ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு திருமணம் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர் அன்றைய தினம் நடைபெற்ற பாகிஸ்தான் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தை நேரடியாக கிரிக்கெட் அரங்கில் சென்று காண விருப்பப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தனது வருங்கால மனைவியிடம் கூறிவிட்டு கராச்சி கிரிக்கெட் அரங்கு விரைந்த அவர் அங்கு விளையாட்டை ரசித்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்றுள்ளது. இதனையடுத்து வீடு திரும்பிய அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.