2018 ஐ.பி.எல்-லில் இந்த 5 வீரர்களின் அதிரடி ஆட்டத்தை பார்க்க முடியாது: ஏன் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முதல் போட்டி வரும் 7-ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது.

இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் வீரர்களின் ஏலத்தில் பல வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

சர்வதேச தொடர்களில் அதிரடி காட்டி வரும் இந்த வீரர்களின் விஸ்வரூபத்தை 2018-ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் பார்க்க முடியாது.

அப்படி ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்த முக்கியமான 5 வீர்களை பற்றி இங்கு பார்ப்போம்.

டிராவிஸ் ஹெட்

அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் தான் டிராவிஸ் ஹெட். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வந்த இவர், இந்த ஆண்டு தன்னுடைய தொகையை ஏலத்தில் 1.5 கோடி என நிர்ணயித்தார்.

ஆனால் இவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. அவுஸ்திரேலியாவின் பிக் பாஸ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக அதிரடி காட்டி விளையாடியதுடன், மட்டுமின்றி அந்தணிக்கு சாம்பியன் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொடுத்தார்.

இப்படிப்பட்ட வீரரை ஐபிஎல் அணிகள் ஏன் ஏலத்தில் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

மார்டின் கப்டில்

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரரும், டி20 உலகின் முக்கியமான வீரராக கருதப்படும் மார்டின் கப்டிலை இந்த ஆண்டு எந்த அணியும் எடுக்காதது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய ஆரம்பவிலை 50 லட்சமாக வைத்த போதும், எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.

இதற்கு எல்லாம் பளீர் என்று அடி கொடுக்கும் வகையில் ஐபிஎல் ஏலம் முடிந்த அடுத்த சில தினங்களிலே அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்து திரும்பி பார்க்க வைத்தார்.

31 வயதான மார்டின் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக கடந்த தொடர்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோர்னே மோர்க்கல்

தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்க்கல் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக பந்து வீசி பவர்பிளேயில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் பவுன்சரில் மிரட்டும் ஒரே வீரர் இவராகத் தான் இருந்தார்.

ஆனால் இவரை இந்த முறை எந்த அணியும் எடுக்கவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டு பர்புல் கேப் வின்னரான இவர் 70 போட்டிகளில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஜோ ரூட்

ஐபிஎல் ஏலத்தில் மிகவும் ஏமாற்றத்திற்குள்ளான வீரர் என்றால் இவர் தான், ஐபிஎல் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இவரை எந்த அணியும் எடுக்க வில்லை.

டி20 உலகில் சாதனைகள் படைத்துள்ள ஜோ ரூட் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இவர் தன்னுடைய ஆரம்ப விலையாக 1.5 கோடியாக நிர்ணயித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹசிம் ஆம்லா

தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய வீரரும் ஐபிஎல் தொடர்களில் இரண்டு சதங்கள் விளாசியவருமான ஹாசிம் ஆம்லாவை எந்தணியும் எடுக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடந்த தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவரின் ஆட்டத்தை இந்த ஐபிஎல் தொடரில் பார்க்க முடியாது.

ஐபிஎல் தொடரில் வீரர்கள் யாரேனுக்கும் காயம் ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை எடுக்கலாம், அப்படி வேண்டும் என்றால் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்