வெளிநாட்டு தொடர்களில் வெற்றிகளை குவிக்க டிராவிட்டின் புதிய யோசனை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை பெற முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் புதிய ஆலோசனை வழங்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது, ஏற்கனவே அந்நிய மண்ணில் இந்திய அணி திணறி வருவதை உறுதி செய்யும் வகையில் இது அமைந்தது.

இதனால், உள்நாட்டில் வெற்றி பெறவது போல், அந்நிய மண்ணில் இந்திய அணியால் வெற்றி பெற முடிவதில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால், ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றாலும், இந்த விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும்,

19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், இந்தியாவின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் தொடர்பாக புதிய ஆலோசனை தெரிவித்துள்ளார்.

அதாவது, இந்திய ‘ஏ’ அணியை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள டிராவிட் முடிவு செய்துள்ளார்.

ஏனெனில், மூத்த வீரர்கள் செல்வதற்கு முன்பாக இளம் வீரர்கள் சென்று வருவது அங்குள்ள பருவநிலை, ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இதனைத் தொடர்ந்து, இந்திய அணி இந்த ஆண்டில் ஜூன் மாதம் இங்கிலாந்திற்கும், டிசம்பர் மாதத்தில் நியூசிலாந்திற்கும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த சுற்றுப்பயணங்களில் இந்திய சீனியர் அணிக்கு முன்பாக, இந்திய ‘ஏ’ அணி செல்லும். அந்த அணியில் சீனியர் வீரர்களும் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. டிராவிட்டின் இந்த புதிய யோசனை இந்திய அணிக்கு பலன் தரும் என்று நம்பப்படுகிறது.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers