சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் பெண்கள் அணிகள் மோதிய 3-ஆவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

பாகிஸ்தான் பெண்கள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த 20-ஆம் திகதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்களை எடுத்த நிலையில், அடுத்து களமிறங்கிய இலங்கை 41.3 ஓவர்களில் 107 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.

இதன் மூலம் தொடரையும் முழுதாக இலங்கை அணி இழந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers