இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தமிழக வீராங்கனை தெரிவு!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு, தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ஹேமலதா தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், 23 வயதான தமிழக வீராங்கனை ஹேமலதா இடம்பிடித்துள்ளார். மேலும் ஜுலான் கோஸ்வாமி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஏக்தா பிஸ்ட், தேவிகா வைத்யா ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

ஆல்-ரவுண்டரான ஹேமலதா, இந்திய ஏ அணிக்காக இதற்கு முன்பு விளையாடியுள்ளார். ஏப்ரல் 6ஆம் திகதி இந்த தொடர் தொடங்க உள்ளது.

இந்திய அணி விபரம்:

மிதாலி ராஜ் (அணித்தலைவர்), ஹர்மன்பிரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஹேமலதா, வேதா கிருஷ்ணமூர்த்தி, தேவிகா வைத்யா, ஜுலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், ஏக்தா பிஸ்ட், பூணம் யாதவ், சுஷ்மா வர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers